அக்காவுடன் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?... மறுபடியும் 'தவ வாழ்க்கை' வாழ தயாரான சசிகலா.! 

அக்காவுடன் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?... மறுபடியும் 'தவ வாழ்க்கை' வாழ தயாரான சசிகலா.! 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். சசிகலா ஒதுங்கிவிட்டதால் இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மோதல் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ஆடியோக்கள் மூலம் தன் அரசியல் வருகையை அறிவித்திருக்கிறார் சசிகலா.

அந்த ஆடியோக்களில் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா, அதன் பின் முன்னாள் எம்.எல்.ஏவிடமும் பேசினார். மேலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில்  தைரியமாக இருங்கள், கட்சியை சரி செய்துவிடலாம்,  நிச்சயம் நான் திரும்ப வந்து விடுவேன்,எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவை போல நிச்சயம் கட்சியை கொண்டு வந்து விடுவேன், நான் மீண்டும் விரைவில் வருவேன்,  கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் நிச்சயம் தொண்டர்கள் அனைவரையும் பார்பேன் என்ற ரீதியிலேயே அவர் பேசிவந்தார். 

அதன்பின்னர் அ.தி.மு.க. வை தனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று கூடிய அவர் அதிமுகவை கைப்பற்றப்போவதே தன் இலக்கு என்று பேசத் தொடங்கினார். இந்நிலையில் தற்போது  சிவனேசன் என்ற தனது ஆதரவாளரிடம் சசிகலா பேசுகையில் அதிமுக ஒரு ஜாதி ரீதியாக செயல்படுவதாக தொண்டர்கள்  புகார் கூறுகின்றனர். அதிமுக ஒரு பொதுவான கட்சி, ஒரு ஜாதி ரீதியாக செயல்படக் கூடாது தெரிவித்தார். பன்னீர் செல்வம் அவ்வாறு (ராஜினாமா) செய்யாதிருந்திருந்தால் அவரை தான் உட்கார (முதல்வர்) வைத்திருப்பேன். அவராகவே அவ்வாறு செய்துவிட்டார். தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்து தம்மிடம் தொண்டர்கள் பேசினாலும் கட்சியின் மீது ஒரே குறையை கூறுகின்றனர். எல்லா ஜாதிக்காரர்களும் அதையே கூறுகின்றனர். அவர்களை நான் கட்டுப்படுத்தியுள்ளேன்.

ஓரிருவர் சுயநலத்துக்காக தொண்டர்களை நீக்குகிறார்கள். தொண்டர்கள் நீக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற தான் வந்தே தீருவேன். அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது என ஆக்ரோஷமாக பேசியுள்ளார். 

சசிகலாவின் குடும்பத்தினர் சசிகலா பற்றி பேசும்போது, அவர்கள் ஜெயலலிதா அம்மையாருடன் அரசியல் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஜெயலலிதாவுக்காகவும், அதிமுகவுக்காகவும் தவவாழ்க்கை வாழ்ந்தனர் என்று கூறுவார்கள்.  சசிகலாவும் அக்காவுடன் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா என்று பல முறை கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தொடர் ஆடியோக்கள் மூலம் தான் இனி சொந்த வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருக்க போவதில்லை. இனி கட்சிக்காக தவவாழ்வு வாழ போகிறேன் என சசிகலா கூறுகிறார் என்றே தெரிகிறது.