ஆளுநர் விவகாரம்..! இந்த சுதந்திரம் கூட இல்லையா? என்ன சொல்கிறார் தமிழிசை..!

ஆளுநர் விவகாரம்..! இந்த சுதந்திரம் கூட இல்லையா? என்ன சொல்கிறார் தமிழிசை..!

தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்கும் வேளையில் இதனால் எதிவும் நடக்கப்போவதில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் - முதலமைச்சர்:

பாஜக ஆளாத மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், மாநில ஆளுநருகும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

Bengal CM, Governor in War or Words Over Dhankhar's Planned Visit to  Post-poll Hit Areas

திமுக vs ஆர்.என்.ரவி:

தமிழ்நாடின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது  முதல் ஆளுநருக்கும் திமுக அரசுக்குமான மோதல் ஆரம்பமானது. சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், கலாச்சாரம், தமிழ், பண்பாடு, இந்திய வரலாறு என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேசி வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் நீட் விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை போன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது ஆளுநர் மீதான  எதிர்ப்பை மேலும் அதிகபடுத்தியது.

Tamilnadu Governor RN Ravi speake to CM Stalin for Disaster recovery |  Indian Express Tamil

இதையும் படிக்க: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு...!

ஆளுநருக்கு எதிரான கடிதம்:

ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்ப, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தோழமை கச்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட வருமாறு திமுக சார்பில் அழைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக திமுக அலுவகத்திற்கு வந்து கையெழுத்திட்டுள்னர். இந்த கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைகப்பட உள்ளது.

Tamil Nadu news: DMK's TR Baalu urges MPs to sign memorandum seeking  "immediate withdrawal of TN Guv" | India News

சுதந்திரம் இல்லையா?

இதுகுறித்து புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுநருக்கு கருத்து கூறுவதற்கு உரிமை உள்ளது. ஆளுநரின் கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க் கருத்து சொல்லலாம். ஆனால் கருத்து சொல்லிவிட்டார் என்பதற்காகவே திரும்பப்பெற முறையிடுவது சரியல்ல என்பதே என் கருத்து எனக் கூறியுள்ளார்.

Seeking Governor's resignation insult to high office: Puducherry LG Tamilisai  Soundararajan | India News

எதுவும் நடக்காது:

கருத்து சொல்லுகிறார் என்பதற்காகவே அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது தேவையில்லாதது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுப்பதால், எதுவும் நடக்கப்போவதில்லை என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.