காதல் மயக்கத்தில் காணமல் போன 16 வயது சிறுமி.. 11 மாதங்களாக வைத்திருந்த இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 16 வயது பெண்ணை கடத்தி 11 மாதங்களாக போலீசுக்கு போக்கு காட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பட்டாபிராம் பகுதியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கடந்த மார்ச் மாதம் காணாமல் போகியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் தான், மாணவியை கடத்திச் சென்றுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜோடியை பிடித்து போலீசார் விசாரித்த போது, இருவரும் காதலித்து வந்ததும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இளைஞரை கைது செய்த போலீசார் ஆள்கடத்தல், போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.