ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி... வெல்டிங் மிஷினுடன் 3 பேர் கைது...

சேலம் மாவட்ட சங்ககிரி அருகே கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் வெல்டிங் இயந்திரம் மூலம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி... வெல்டிங் மிஷினுடன் 3 பேர் கைது...

சங்ககிரியில் தனியார் ஏடிஎம் மையத்தில் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளையடிக்க முயன்ற 3 குற்றவாளிகளை சங்கிரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கார் மாற்றும் ஏடிஎம் மெஷினை உடைக்க பயன்படுத்தும் டூல்ஸ்களையும் பறிமுதல் செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி ஈரோடு தனியார் ஏடிஎம் மையத்தில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த குற்றவாளியும் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் பழைய தபால்நிலயம் அருகில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ATM இயந்திரத்தில் CCTV கேமராவிற்க்கு கருப்பு ஸ்பிரே அடித்து வெல்டிங் மிசின் மூலம் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் தப்பியது.

இதனையடுத்து தனியார் வங்கி மேலாளர் ரிதீஷ்குமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவந்தனர். இந் நிலையில் நேற்று சங்ககிரியிலிருந்து ஈரோடு செல்லும் பிரிவு சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி போலீசார் விசாரணை செய்ததில் காரில் வந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதன் பின்னர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்கையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த பூபாலன், ஜெகதீஷ் மற்றும் டிவிஎஸ் மேடு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ்  என்பது தொரியவந்தது.

மேலும் சங்ககிரி தனியார் வங்கி ஏடிஎம் மெஷினில் கொள்ளை முயற்சி செய்ததும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த சங்ககிரி போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய சொகுசு கார், வெல்டிங் இயந்திரங்கள் மற்றும் டூல்ஸ் உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் பூபாலன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஈரோடு சூரம்பட்டி பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாவட்டங்களில் ஏடிஎம் இயந்திரத்தையே குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 3 பேர் சங்ககிரியில் போலீசார் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.