திருத்துறைப்பூண்டி : மர்ம கும்பல் தாக்கியதில் சாலையில் நடந்து சென்ற 3 பேர் படுகாயம்..!

படுகாயமடைந்தவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்..!

திருத்துறைப்பூண்டி : மர்ம கும்பல் தாக்கியதில் சாலையில் நடந்து சென்ற 3 பேர் படுகாயம்..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே மர்ம கும்பல் அரிவாளால் தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் காலனியை சேர்ந்த அரவிந்தன், ஆனந்த்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.