லோடு ஆட்டோவில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது.!!
சென்னை பூந்தமல்லி அருகே லோடு ஆட்டோவில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார், லாரி டிரைவரான இவர், பூந்தமல்லி யை அடுத்த நசரத்பேட்டை அருகே வண்டலூர் - வெளிவட்ட சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லோடு ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துக்குமாரை தாக்கி அவரிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து முத்துக்குமாரிடன், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையரகளையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து பணம், செல்போன், மற்றும் லோடு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.