பூட்டி இருந்த வீட்டின் கதவை 60 சவரன் நகை கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை !!

மதுரை திருநகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பூட்டி இருந்த வீட்டின் கதவை 60 சவரன் நகை கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை !!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் லயன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்(55). இவர் மனைவி ராமலட்சுமி, இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் ஒருவர் அமெரிக்காவிலும் மற்றொருவர் பெங்களூரில் உள்ளனர். பொன்ராஜ் திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில் அய்யனார் என்னும் பெயரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். வழக்கமாக பொன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் வியாபாரத்திற்காக கடைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பொன்ராஜ் தனது மனைவி ராமலட்சுமியுடன் வீட்டின் கதவை பூட்டி விட்டு வியாபாரத்திற்காக கடைக்கு சென்றுள்ளனர். பின்னர் இரவு 11 மணி அளவில் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பிய பொன்ராஜ்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொன்ராஜின் வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. 

மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பொன்ராஜ் திருநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை பெயர்ப்பது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.