சகோதரிகளுக்குள் சண்டை... தாய் திட்டியதால் 7ம் வகுப்பு சிறுமி தற்கொலை...

கரூர் அருகே தாய் திட்டியதால் 7ம் வகுப்பு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரிகளுக்குள் சண்டை... தாய் திட்டியதால் 7ம் வகுப்பு சிறுமி தற்கொலை...

வெள்ளியணைபகுதியினை சேர்ந்தவர்கள் குபேரன், மீனா தம்பதி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளநிலையில்,  இரண்டாவது மகள் திவ்யதர்ஷினிக்கும் 3-வது மகளுக்கும் சின்ன சின்ன சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் தாய் மீனா, திவ்யதர்ஷ்னியை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போன சிறுமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் பதற்றமான குடும்பத்தினர் ஆங்காங்கே தேடிய நிலையில் சிறுமி கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து மீட்பு படையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.