ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியிடம் அத்துமீறல் : போக்சோவில் கைதாகி கம்பி எண்ணும் 65 வயது முதியவர் !!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியிடம் அத்துமீறல் : போக்சோவில் கைதாகி கம்பி எண்ணும் 65 வயது முதியவர் !!

சென்னை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி உள்பட பெற்றோர்கள் ஆந்திரா மாநிலம் சாய் பி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கர்நாடக மாநில கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏறி சென்னைக்கு தனது வீட்டிற்கு நேற்று அதிகாலை  திரும்பி கொண்டு இருந்தனர்.‌

ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் அதே பெட்டியில் பயணம் செய்த 65 வயது முதியவர் தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி  பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதனால் பெற்றோர்கள் அதே பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனால் அந்த முதியவரை பிடித்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பவம் நடைபெற்ற  இடம் ஜோலார்பேட்டை அருகே இருப்பதால் அந்த முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சென்னை வடபழனி பூக்கார தெருவை சேர்ந்தவர் சாமுவேல் பெட்ரோமாண்டஸ் (வயது 65) என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.