ஆடுகளை திருடி 4 பேர் கொண்ட கும்பல்....! மடக்கி பிடித்த போலீசார்...!

ஆடுகளை திருடி 4 பேர் கொண்ட கும்பல்....! மடக்கி பிடித்த போலீசார்...!

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(45). விவசாயியான இவர் ஒலக்கூரிலிருந்து  மங்களம்  செல்லும் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த மாதம் வழக்கம்  போல் ஆடுகளை மேய்த்து தனது ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து மறுநாள் காலையில் சென்று ஆட்டுக் கோட்டையில் பார்த்தபோது அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 வெள்ளாடுகள் , 3 செம்மறி ஆடுகள் என மொத்தம் 30 ஆடுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில்  ஒலக்கூர் போலீசார் ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சாரம் லேபை அருகே காரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் இரண்டு ஆடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் திண்டிவனம் சாந்தை மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சுதாகர் (22), நத்தமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சத்யராஜ் (26), மனோகரன் என்பவரது மகன் குமார் (26), கன்னியப்பன் என்பரது மகன் கமல் (34) என்பதும் தெரிய வந்தது. இவர்கள்  ஒலக்கூர் உள்ளிட்டப் பகுதிகளில் தொடர்ந்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடுகளை திருடி வருவதும் தெரிய வந்தது.

இந்நிலையில் போலீசார் அவர்களிடம் இருந்த இரண்டு ஆடுகள் 
மற்றும் கார் ஆகியவற்றை  பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.