சிறுமி மீது ரசாயன பவுடரை பூசி தீ வைத்த மர்ம நபர் !!

தேனி அருகே 8 வயது சிறுமி மீது ரசாயன பவுடர் பூசி தீ வைத்த மர்ம நபர். சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.

சிறுமி மீது ரசாயன பவுடரை பூசி தீ வைத்த மர்ம நபர் !!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த விஸ்வநாதன், சபரிசூர்யா தம்பதியினரின் மூத்த மகள் மிரயம்ஜோபிதா(8). விஸ்வநாதன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாயும் வேறொரு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.

மிரயம்ஜோபிதா தனது பாட்டி  அமலபுஷ்பத்தின் பராமரிப்பில் இருந்து அதே ஊரில் உள்ள 3ம் வகுப்பு படித்து வருகிறார். அமலபுஷ்பம் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று பள்ளி மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அங்கன்வாடிக்கு தனது பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார் அமலபுஷ்பம்.

அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த  மிரயம் ஜோபிதாவிடம் வந்த மர்ம நபர், அவரது பெயர் மற்றும் தாய், தந்தையரின் பெயர் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தனது கையில் இருந்த ஏதோ ஒரு ரசாயன பவுடரை குழந்தையின் உடல் முழுவதும் பூசி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் சிறுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் துடிதுடித்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கேட்டு அவரது பாட்டி ஓடிவந்து உடலில் நீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். பின்னர் சிறுமி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ வைத்த நபர் யார்? எதற்காக தீ வைத்தார்? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அந்த அங்கன்வாடியில் இருந்த சிசிடிவி கேமராவும் இயக்கத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. சின்னமனூர் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.