போலி ஆவணம் தயாரித்த போலி அரசு அதிகாரிகள்!! போலீஸ் வலைவீச்சு!!!

அரசு அதிகாரிகள் போல் கையொழுதிட்டு போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனைகள் விற்பனை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலி ஆவணம் தயாரித்த போலி அரசு அதிகாரிகள்!! போலீஸ் வலைவீச்சு!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளேரி கிராமத்தில் உள்ள ஆர்.பி.ஜி கார்டன் என்ற பெயரில் 2014ம் ஆண்டில் 140 வீட்டு மனைகள் விற்பனை செய்ய நிறுவபட்டது. மேலும் அரசு உத்தரவு மற்றும் அங்கீகாரம் இல்லாமல் நன்செய் விளை நிலங்களை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

ஆனால் ஆரணியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அரசு என்பவர் நன்செய் நிலங்களை வீட்டு மனை பிரிவில்  போடப்பட்டதால் இந்த வீட்டுமனைகள் விற்பனை செய்ய முடியவில்லை.

மேலும் படிக்க | மேற்கு வங்கம்: "இ-நக்கெட்ஸ்" கேம் செயலி மூலம் பண மோசடி..தொழிலதிபர் வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய ரூ.17கோடி..!

இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஆரணி ஓன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலர் மற்றும் நகர்புற வீட்டுமனை அங்கீகாரம் இணை இயக்குநர் ஆகியோரின் கையொழுத்திட்டு போலியாக ஆவணங்கள் தயாரித்து ஆரணி பத்திர பதிவு அலுவலகத்தில் சுமார் 40லட்சம் மதிப்பிலான 9 வீட்டு மனைகளை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் போலி ஆவணம் தயாரித்து வீட்டுமனைகள் விற்பனை செய்யபட்டதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

மேலும் புகாரின் பேரில் மாவட்டஆட்சியர் முருகேஷ்  விசாரணையில் ஊர்ஜிதம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆரணி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகர் சீனிவாசன் ஆரணி தாலுக்கா போலீசில் ஆரணியை சேர்ந்த, அரசு, மற்றும் தணிகைவேல்,  ஆகியோர்  மீது மோசடி மற்றும் போலி அரசு ஆவணங்களை தயாரித்ததாக புகாரளித்தனர்.

மேலும் புகாரின் பேரில் ஆரணி கிராமிய போலீசார் ஆரணியை சேர்ந்த அரசு மற்றும் உதவியாளர் தணிகைவேல் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க | சமூக ஊடகங்களை கண்காணிக்க 203 பேர் கொண்ட காவலர் குழு..! வச்சாருப்பா ஆப்பு நம்ம டிஜிபி சைலேந்திர பாபு!