பாட்னாவில் குண்டு வெடிப்பு; காவல் உதவி ஆய்வாளர் கையில் காயம்:

பாட்னாவின் சிவில் நீதிமன்றத்தில் குண்டு வெடித்தலா, பதற்றம் உருவாகியுள்ளது. மறைவாக கொண்டுவரப்பட்ட அந்த வெடியானது, ஒரு ஹாஸ்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்த வெடி, நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட நேரத்தில் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

பிகாரின் தலைநகர் பாட்னாவில், இன்று மதிய அளவில் திடீரென குண்டு வெடித்துள்ளது. திடிரென நடந்த இந்த சம்பவத்தால் பதற்றம் நிலவியதோடு, சில நேரம் நீதிமன்றமே ஸ்தம்பித்தது. அங்கிறுந்த காவலர்கள், சம்பவ இடத்தை சரி செய்ய உடனடியாக களத்தில் இறங்கிய நிலையில், காவல் உதவி ஆய்வாளர் கதம் குவான் சிங் என்பவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கிடைத்துள்ள தகவலின் படி, சில நாட்களுக்கு முன் அங்குள்ள ஒரு விடுதியில், சிறிய எவெர்சில்வர் டப்பாக்களில் வெடி மருந்துகள் வைத்திருப்பதை அறிந்த போலீசார், உடனடியாக கைப்பற்றி வழக்கும் பதிவு செய்திருந்தனர். அந்த குண்டை, வழக்கு விசாரணைக்கு, பாட்னா சிவில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த குண்டு வெடித்துள்ளதாகத் தெரிகிறது.

அதிகாரிகள் எச்சரிக்கையாகவே இருந்ததால், பெரிதான பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாகவும், யாரும் கவலை அடைய வேண்டாம் என்றும் பிர்பஹோர் காவல் நிலைய அதிகாரி சபி உல் ஹக் என்பவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்த காவல் அதிகாரி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிறிய அளவில் வெடி மருந்துகள் இருந்ததால், வெடித்ததன் தாக்கம் மிகக் குறைவாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், இது குறித்த விசாரணை தொடரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.