பணியை நீட்டிக்க மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம்...  நூலக பொறுப்பு அதிகாரி கைது...

கிராமப்புற நூலகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தினக்கூலி  ஊழியரிடம் அவருடைய பணியை நீட்டிப்பதற்காக லஞ்சம் வாங்கிய அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார்.

பணியை நீட்டிக்க மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம்...  நூலக பொறுப்பு அதிகாரி கைது...

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள மல்லல் கிராமத்தில் கிராமப்புற நூலகம் உள்ளது இங்கு  மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் என்பவர் 2014-ம் ஆண்டு முதல் அந்த நூலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தினமும் 350 ரூபாய் சம்பளம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இவருடைய பணி காலம் 89 நாட்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் அதனை நீட்டிப்பதற்காக மாவட்ட மைய நூலக அதிகாரி பொறுப்பு கண்ணன்  அவர்களிடம் கூறியுள்ளார் அவர் பணி நீட்டிப்பு செய்ய  ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நீட்டிப்பேன் இல்லை ஆனால் புதிதாக ஒரு நபரை நியமிக்கப் போவதாக கூறியுள்ளார். 

பணம் கொடுக்க இயலாத செந்தில்குமார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் அதனடிப்படையில் இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரூபாய் 5 ஆயிரத்தை  செந்தில்குமார் அதிகாரி கண்ணனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார்  கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி ஊழியரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் ஒரு நடக்க முடியாத மாற்றுத்திறனாளியிடம்  ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளி செந்தில்குமார் நம்மிடம் தெரிவிக்கும் பொழுது நான் மிகவும் ஏழ்மை பட்ட சூழலில் இருப்பதாகவும் இரண்டு குழந்தைகளை வைத்து அந்த தினக்கூலி சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் எனக்கு இந்த பணியை மாவட்ட நிர்வாகம்  நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்  இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க கூறினார்.