44 கிலோ கஞ்சா பறிமுதல்  : கார் டிரைவரை கைது செய்து விசாரணை  !!

ஓட்டேரியில் 44 கிலோ கஞ்சா பிடிபட்ட விவகாரத்தில் டிரைவர் கைது  கார் பறிமுதல்.

44 கிலோ கஞ்சா பறிமுதல்  : கார் டிரைவரை கைது செய்து விசாரணை  !!

சென்னை ஓட்டேரி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் மூன்று பார்சலுடன் நின்றுகொண்டிருந்த இருவரை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது ஒருவர் தப்பித்து ஓடிவிட மற்றொருவர் பிடிபட்டார்.  மூன்று பார்சல்களில் இருந்து 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் 24. என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சேலத்திலிருந்து ஒரு குழுவாக வந்து ரயில் மூலம் ஆந்திராவில் இருந்து வந்த கஞ்சாவை வாங்கிக்கொண்டு சேலத்திற்கு காரில் செல்ல இருந்தது. போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது தினேஷ் பிடிபட்ட நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  

இதனையடுத்து ஓட்டேரி போலீசார்  சேலத்திற்கு செல்லும் வழியில் உள்ள  அனைத்து சுங்க சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளுக்கு சொகுசு காரின் பதிவு எண் மற்றும் தினேஷ் இடமிருந்து அவரது செல்போனில் பதிவாகியிருந்த மற்றவர்களின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அனுப்பிவைத்தார். இதனையடுத்து நேற்று மதியம் வந்தவாசி சோதனைச்சவடியில் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை வந்தவாசி போலீசார் மடக்கி பிடித்தனர். 

காரில் இருந்த எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 23 என்ற நபரை கைது செய்த வந்தவாசி போலீசார் இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று  ஓட்டேரி போலீசார் மோகனை கைது செய்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில், போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்து என்னுடன் வந்த யோகராஜ் பிரகாஷ் இந்துமதி ஆகிய 3 பேரையும் வந்தவாசி பைபாஸில் இறக்கி விட்டுவிட்டு அவர்களை பேருந்தில் செல்லும்படி அறிவுறுத்திவிட்டு நான் ஊருக்குள் புகுந்து சென்று விடலாம் என்று வந்து போலீசில் மாட்டி கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மோகன் மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடிவருகின்றனர்.