கணவனை கொன்ற வழக்கு- மனைவி, உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை...

கணவனைக் கொலை செய்த வழக்கில், மனைவி, கள்ளகாதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை  விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கணவனை கொன்ற வழக்கு- மனைவி, உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை...

சேலம் மாவட்டம் சங்ககிரி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, அவருடையை மனைவி சுமதி. இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் ரவியின் உடல் கிடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போது இருந்த சங்ககிரி மற்றும் தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டவரான ரவியின் மனைவிக்கும் சின்னதம்பி என்பவருக்கும் கள்ளகாதல் இருந்து வந்ததாகவும், கள்ளகாதலுக்கு கணவன் இடையூராக இருப்பதன் காரணத்தால் அவரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியதாகவும்,  அதன்படி சம்பவதன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை மனைவி சுமதி, கள்ளகாதன் சின்னதம்பி அவருடைய நண்பர்கள் உள்பட 4 பேர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விவசாய விவசாய தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமதி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வினோத் என்பவர் சிறார் என்பதால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில் சதி திட்டம் தீட்டி கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி சுமதி, கள்ளக்காதலன் சின்னத்தம்பி, அவரது நண்பர் புவனேஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு அளித்தார்.