இளைஞரை தாக்கி செல்போன் பறிப்பு :  3 பேரை கைது செய்த போலீஸ் !!

கொடுங்கையூரில் இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளைஞரை தாக்கி செல்போன் பறிப்பு :  3 பேரை கைது செய்த போலீஸ் !!

சென்னை திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சொந்தமாக மாலை கட்டும் தொழில் செய்து வருகிறார். கொடுங்கையூரில் வசித்து வரும் தனது அக்கா சசிகலா என்பவரை பார்ப்பதற்காக நேற்று இரவு 9 மணி அளவில் டீச்சர்ஸ் காலனி மெயின் ரோடு 3வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மூன்று நபர்கள் டில்லிபாபுவை வழிமறித்து மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி உள்ளனர். அவர் தனது கையில் இருந்த 300 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு சென்ற போது மீண்டும் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயினை பறிக்க முற்பட்டனர் அப்போது டில்லி பாபு கூச்சலிட்டு உள்ளார்.

அப்போது பொதுமக்கள் மர்ம நபர்களை பிடிக்க முற்பட்டபோது ஒருவர் மட்டும் சிக்கினார் மற்ற இரண்டு நபர்கள் ஓடிவிட்டனர். டில்லி பாபுவின் கழுத்தில் இருந்து பறிக்க முயன்ற செயின் கீழே விழுந்து கிடந்தது. இதனை பொதுமக்கள் எடுத்து டில்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் அங்கு வந்த கொடுங்கையூர்  போலீஸார் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் மாதவரம் மூலசத்திரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் வயது 30 என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் காமராஜ் சாலை பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் என்கின்ற காக்கா, கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் இவர்களிடம் இருந்து ஒரு சின்ன கத்தி பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.