வடசென்னையை கலக்கிய செயின் பறிப்பு கொள்ளையன் கைது…  

வட சென்னைக்குட்பட்ட ஆர்கே நகர் திருவொற்றியூர் புது வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செல்போன் செயின் பறிப்பு இரவில் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் திருடுவது என அதிக புகார்கள் வந்தது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சிவபிரசாத்  உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் ஆர்.கே.நகர் ஆய்வாளர் ரவி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அனைத்தும் ஒரே நபர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில் ஆர்கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கில் 1 சவரன் செயின் பறிப்பு விலையுர்ந்த 2 செல்போன்கள், மற்றொரு வழக்கில் ஒன்றரை சவரன் செயின்,  செல்போன், மீண்டும் அதே பகுதிக்குட்பட்ட இடத்தில் அரை சவரன் ஜிமிக்கி கம்மல், தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கு ஒன்றில் ஒரு சவரன் செயின், திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கில் ஒரு சவரன் செயினை என மொத்தம் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கடந்த ஒரு வருடங்களாக தலைமறைவாக இருந்த ராமு என்கிற ராம்குமார் (21) என்பவரை கைது செய்து வழக்கில் திருடப்பட்ட அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஒரு வருட காலமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பிடிபடாமல் இருந்த கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு துணை ஆணையர் பாராட்டு தெரிவித்தார்