தலைமைச் செயலகத்தில் வேலை? ரூ.51 லட்சம் மோசடி செய்த முன்னாள் மத்திய கமாண்டோ படை வீரர் கைது!

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக 51 லட்சம் மோசடி செய்த முன்னாள் மத்திய கமாண்டோ படை வீரரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தலைமைச் செயலகத்தில் வேலை?  ரூ.51 லட்சம் மோசடி செய்த முன்னாள் மத்திய கமாண்டோ படை வீரர் கைது!

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக 51 லட்சம் மோசடி செய்த முன்னாள் மத்திய கமாண்டோ படை வீரரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் நிம்மகெளடா. இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராகுல் நிம்மகெளடா. இவர்களது குடும்ப நண்பரான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகிரி பாலன் என்பவர் தற்போது ஆம்னி பேருந்து வைத்து தொழில் நடத்தி வருகிறார். மேலும் அழகிரி பாலன்  மத்திய கமாண்டோ படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். மேலும் கமாண்டோ படை வீரராக இருந்த பொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்ப நண்பரான  சீனிவாசன் நிம்மகெளடாவிடம் தலைமைச் செயலகத்தில் தனக்குத் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும், தலைமைச் செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி காலியாக இருப்பதாகவும், அதிகாரிகளுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அந்த வேலை உங்கள் மகனுக்கு வாங்கித் தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய  சீனிவாசன் நிம்மகெளடா மற்றும் ராகுல் நிம்மகெளடா 5 தவணையாக 51 லட்சம் ரூபாயை பணமாகவும், காசோலையாகவும் வழங்கியுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாக 51லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்ட அழகிரி தேவன் அவர் கூறியது போல வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் நிம்மகெளடா மற்றும் அவர மகன் ராகுல் நிம்மகெளடா ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரின் பேரில் அழகிரி பாலனை நேரில் அழைத்து விசாரணை செய்தபோது அழகிரி பலன் ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை அழகிரி பாலனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.