மதனிடம் ஏமார்ந்தவர்கள் dcpccb1@gmail.com இந்த முகவரியில் புகார் தெரிவிக்கலாம்!!

ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களது ரகசியம் காக்கப்படம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மதனிடம் ஏமார்ந்தவர்கள் dcpccb1@gmail.com இந்த முகவரியில் புகார் தெரிவிக்கலாம்!!

மதனிடம் ஏமார்ந்தவர்கள் ஈமெயில் புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களது ரகசியம் காக்கப்படம் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாப்ஜி மதன் நேற்று கைதான நிலையில், மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம் .

ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களது ரகசியம் காக்கப்படம் எனவும் தெரிவித்துள்ளனர்.

DCPCCB1@GMAIL.COM என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யூ-டியூப் மூலமாக சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி செலுத்துவில்லை என்பதும் மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதனின் மனைவியின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் மற்றும் தாம்பரம்,  பெருங்களத்தூரில் 45 இலட்சம் மதிப்பில் சொகுசு வீடு, 2 சொகுசு கார்கள், பல இலட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் வாங்கி குவித்துள்ள மதன் இது வரை வருமான வரிக்கட்டவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.