திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் மீது பார் கவுன்சிலில் புகார்...

திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் மீது பார் கவுன்சிலில் புகார்...

சென்னையைச் சேர்ந்த தேவராஜ்  தமிழ்நாடு பார் கவுன்சிலில் திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் தேவராஜ் கூறியிருப்பதாவது: மூத்த வழக்கறிஞரான வில்சன் உள்ளிட்ட 30 மூத்த வழக்கறிஞர்களை தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் எழும் வழக்குகளில் வாதாட பணியமர்த்துவதாக தமிழக அரசு கடந்த 4.8.21 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 11.8.21 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் நிர்மல்குமார் அமர்வு முன்பாக தமிழக அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் வில்சன் குற்றமசாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜராகியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் மீது லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கினை ரத்து செய்ய கோரி மா.சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகியது conflict of intrest ஆகும்.

மேலும் இவ்வழக்கின் விசாரணை பட்டியலில் பி.வில்சன் அசோசியேட்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் அவரது மகனான ரிச்சர்ட் வில்சனும் பங்குதாரராக உள்ளார். இந்த ரிச்சர்ட்சன் வில்சன் தற்போது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு கடந்த 28.5.21 அன்று  தமிழக அரசால் இதற்கென தனியாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மகன் ரிச்சர்ட்சன் தமிழக அரசின் வழக்கறிஞராக உள்ளநிலையில் அவரது தந்தையான பி.வில்சன் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராவது என்பது சட்ட நெறிகளுக்கு எதிரானது.

மேலும் இது வழக்கறிஞர் சட்டம் 1961 ன் படி proffessional misconduct எனப்படும் தொழில் நடத்தை விதிமுறை மீறலும் ஆகும். எனவே திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் மீது தொழில் நடத்தை விதிமுறை மீறலுக்காக பார் கவுன்சில் விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேவராஜ்  என்பவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.