திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை - உடல் பாகங்களை தேடும் போலீசார்..

சென்னை ராயபுரத்தில் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை - உடல் பாகங்களை தேடும் போலீசார்..

மணலி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி, காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் ராயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தமீம் பானு என்பவரது வீட்டில் திமுக பிரமுகர் தங்கியிருந்தபோது, அப்பெண்ணின் சகோதரர் வாஷிங் பாஷாவுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது திமுக பிரமுகரை அவர் வெட்டி கொன்றதும் தெரியவந்தது. மேலும் உடலை துண்டு துண்டாக வெட்டி தலையை அடையாறு கூவம் ஆற்றிலும், உடல் பகுதிகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் வீசிய தெரியவந்தது.

இந்நிலையில் நான்கு நாட்களாக சக்கரபாணி காணவில்லை என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் செல்போன் சிக்னலை வைத்து ராயபுரத்தில் உள்ள க்ரேஸ் கார்டன் மூன்றாவது சந்திப்பகுதியில் கடைசியாக இருந்ததாக அறிந்துகொண்டுள்ளனர். 

இதையடுத்து கொலையாளியை கைது செய்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் திமுக பிரமுகரின் உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.