தற்கொலைக்கு முயற்சித்த ப்ளஸ் 2 மாணவி : மதம் மாற வற்புறுத்தியதால் மன உளைச்சலா?

திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவி பூச்சிமருந்துகுடித்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கு முயற்சித்த ப்ளஸ் 2 மாணவி : மதம் மாற வற்புறுத்தியதால் மன உளைச்சலா?

அரியலூர்மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் முதல் மனைவி கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது 17 வயது மகள் மைக்கேல்பட்டி தூயஇருதய மேல்நிலைப் பள்ளியில்  12ஆம் வகுப்பில் படித்து வருகிறார். அருகில்உள்ள செயின்ட். மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் மாணவி வாந்தி எடுத்துள்ளார். தனக்கு வயிற்று வலி என்று மாணவி கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். மறுதினம் மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியதும். அவர் வந்து அழைத்துச் சென்று விட்டார். கடந்த 15ஆம் தேதி அன்று மீண்டும் உடல்நிலை சரியில்லாமல்  போகவே, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்யவேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலினால் பூச்சி மருந்து குடித்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

உடனடியாக இதுகுறித்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை முருகானந்தம் தரப்பினர், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் வந்து விடுதி வார்டன் மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி பூச்சிகொல்லி மருந்தை குடித்ததாக கூறி கூச்சலிட்டனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வார்டன் சகாயமேரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.