சுவாதியை கொலை செய்த ராம்குமார் உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்டாரா? தொடங்கியது குறுக்கு விசாரணை…  

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனித உரிமைகள் கமிஷன் குறுக்கு விசாரணை நடத்தியது.

சுவாதியை கொலை செய்த ராம்குமார் உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்டாரா? தொடங்கியது குறுக்கு விசாரணை…   

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி(24), கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி காலை 6:40க்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த 24 வயது ராம்குமாரை ஜூலை 1ஆம் தேதி கைது செய்தனர்.

போலீசார் கைதின் போது கழுத்தை அறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்றா ராம்குமார். இதனால் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மனித உரிமை கமிஷனில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், தலைமை வார்டன் சங்கர்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ராம்குமார் தற்கொலை வழக்கு மனித உரிமை கமிஷன் உறுப்பினர் துறையிடம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற புழல் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் வேணு ஆனந்த், ஆண்டாள் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது . இருபத்தி எட்டாம் தேதி நடைபெறும் என்று விசாரணையின்போது ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.