சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை !!

மனைவியை கொலை செய்த வழக்கில் 69 வயது கணவருக்கு, ஆயுள் தண்டனை, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை !!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் - வயது-69, இவர் கடந்த  26-08-2018 தேதி அன்று தன் 60 வயதான தனது மனைவி அஞ்சலை மீது சந்தேகப்பட்டு நடந்த சண்டையில், வயிலில் புல் வெட்டும் களை வெட்டியால் மனைவியை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அஞ்சலை உயிரிழந்தார்.

இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து ஜூன் 22ஆம் தேதி  மாவட்ட முதன்மை  அமர்வு நீதிமன்ற நீதிபதி பல்கீஸ் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கில் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதால்,  மனைவியை கொலை செய்த 69 வயதான நடராஜனுக்கு  ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி நடராஜனை போலீசார், திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.