பெசன்ட் நகர் அடுக்குமாடி குடியிருப்பு... பலமுறை கருக்கலைப்பு... அந்தரங்க போட்டோ அனுப்பி மிரட்டல்!! முன்னாள் அமைச்சரின் அட்டூழியம்!!

அ.தி.மு.க முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பெசன்ட் நகர் அடுக்குமாடி குடியிருப்பு...  பலமுறை கருக்கலைப்பு... அந்தரங்க போட்டோ அனுப்பி மிரட்டல்!! முன்னாள் அமைச்சரின் அட்டூழியம்!!

2009 ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. மலேஷியா குடியுரிமை பெற்ற இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மலேஷியா சுற்றுலா வளர்ச்சிக் கழக தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். பணி நிமித்தமாக அடிக்கடி சென்னை வந்து சென்றுள்ளார். இவரை  தகவல் தொழில்நுட்பத்துறை மாஜி அமைச்சர் மணிகண்டன், சந்திக்க விரும்புவதாகவும், சுற்றுலா வளர்ச்சித்துறை தொடர்பாக பேசவுள்ளதாகவும் கூறி, பரணி என்பவர் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அமைச்சரின் இல்லத்தில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் அவரை நேரில் சந்தித்த சாந்தினியிடம் மலேஷியாவில் முதலீடு செய்யப்போவதாகவும், அது தொடர்பாக பேசவேண்டும் எனவும் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. சாந்தினியின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசிய அமைச்சர் மணிகண்டன், ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

 மேலும், தன்னுடைய மனைவி மூலம் தனது குடும்ப வாழ்வில் எந்தவித இன்பமும் கிடைக்கவில்லை என்றும் சாந்தினி தன்னுடைய இல்லற வாழ்வில் இணைந்தால் அழகும் அதிஷ்டமும் சேர்ந்து, தனக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும் என சாந்தினியிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது சாந்தினி சம்மதித்தால், மனைவியை விவாகரத்து செய்து சட்டப்படி திருமணம் செய்துகொள்வதாகவும் சாந்தினிக்கு வாக்குறுதி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இதனையடுத்து பெசண்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் கணவன், மனைவியாக வாழத் துவங்கியுள்ளனர். 

அத்தோடு சாந்தினி வெளியே சென்றுவர அமைச்சரின் வாகனம், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், ராமேஷ்வரம், புதுச்சேரி என சுற்றுலா, 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அமைச்சரின் உரையை மனைவி என்ற முறையில் நேரில் பார்வையிட அனுமதி என அடுத்தடுத்த கட்டங்களுக்கு இவர்களது உறவு கடந்து சென்றுள்ளது. 

இந்த விவகாரம் மாஜி அமைச்சரின் குடும்பத்தினருக்கும் தெரியவர அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஒரு கட்டத்தில் சாந்தினி அமைச்சர் மணிகண்டனை சட்டப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து சாந்தினிக்கு அவர் சந்தேகம் ஏற்படத் துவங்கியுள்ளது. இதனால் மாஜி அமைச்சரோடு தான் இருந்த தருணங்களை ஆதாரங்களாக சாந்தினி சேர்த்து வைக்க தொடங்கியுள்ளார்.

இதனிடையே மூன்று முறை சாந்தினி கருவுற்று கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பும் செய்ததாக கூறப்படுகிறது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரின் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்யக்கூறி  தீக்குளிக்க முயற்சியும் செய்துள்ளார் சாந்தினி. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

அந்த நேரத்தில் கொரோனா தொற்று ஏற்படவே ஊரடங்கு காரணமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கும், சாந்தினி மலேசியாவிற்கும் சென்றுவிட்டனர். மீண்டும் 2021 ஆம் ஆண்டு இருவரும் நேரில் சந்தித்தபோது, திருமணம் செய்துகொள்வதாக மணிகண்டன் கொடுத்த வாக்குறுதியை நம்பி இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சாந்தினியை இருவரும் ஒன்றாக இருந்தபோது, எடுத்த நெருக்கமான படங்களை காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார்.

தன்னிடம் சாந்தினியின் அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதைக்கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்ட அதிர்ச்சியடைந்துள்ளார் சாந்தினி. அதன் பின்னர் சாந்தினியை முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அறிமுகப்படுத்திய பரணி மூலம் சாந்தினிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில்தான் சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆதாரங்களோடு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் குறித்த செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.