விஜய் மக்கள் மன்ற நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு : 6 மாதத்திற்கு பிறகு குற்றவாளிகள் கைது!!

விஜய் மக்கள் மன்ற நிர்வாகியை கத்தியால் வெட்டிய நான்கு பேர் ஆறு மாதத்திற்குப் பின் கைது.

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு :  6 மாதத்திற்கு பிறகு குற்றவாளிகள் கைது!!

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் பிரபு. இவர் விஜய் மக்கள் மன்றத்தில் பெரம்பூர் பகுதி செயலாளராக உள்ளார் கடந்த வருடம் ஜூன் மாதம் விஜய் மக்கள் மன்ற போஸ்டர்களை இவர் வியாசர்பாடி உள்ளிட்ட பல இடங்களில் ஆட்களை வைத்து ஒட்டிக்கொண்டு இருந்தார் அப்போது வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி பகுதியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த போது அப்பகுதி வழியாக  வந்த சில இளைஞர்கள் பிரபுவிடம் தகராறு செய்து போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.

அதன்பிறகு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை வெட்டினர். இதில் பிரபு காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகின்றன அதன்பறகு இந்த இளைஞர்கள் ஏரியாவை விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இவர்கள் நான்கு பேரும் வியாசர்பாடி பகுதியில் சுற்றித் திரிவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில்  கொடுங்கையூர் போலீசார் எருக்கஞ்சேரி பகுதியில் வைத்து நேற்று காலை 4 பேரையும் பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் எருக்கஞ்சேரி எஸ்.ஏ.காலனி பகுதியை சேர்ந்த தினகரன், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், தீபக், ஜெய் அபிலாஷ் என்பது தெரியவந்தது இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.