8 லட்சம் மதிப்புள்ள 912 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்... நான்கு பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை...

நன்னிலம் அருகே 8 லட்சம் மதிப்புள்ள 912 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

8 லட்சம் மதிப்புள்ள 912 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்... நான்கு பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை...

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பேரளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பேரளம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்ட போது எதிரே வந்த நான்கு சக்கர போலரோ பிக்கப் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக புகையிலை குட்கா இருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து விசாரணையில் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் ஸ்ரீராம் (22), முத்துக்குமார் மகன் பரணிதரன் (22) கொல்லுமாங்குடியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (40) ,  ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 612 கிலோ புகையிலை குட்கா மற்றும் போலரோ பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த புகையிலை பொருட்கள் நீடாமங்கலத்தில் இருந்து எடுத்து வந்ததாக கூறியதையடுத்து போலீசார் நீடாமங்கலத்தில் விரைந்து சென்று அந்த குடோனின் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ பான்மசாலாவை பறிமுதல் செய்து முனியப்பனை கைது செய்து பேரளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.