பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்...காவல்நிலையம் சென்று புகார் அளித்த மனைவி.!!

வடசென்னை அடுத்த புதுவண்ணாரப்பேட்டை அருகே சகோதரியையும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள் சிலரையும் ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன் மீது கட்டிய மனைவி காவல் நிலையத்தில் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்...காவல்நிலையம் சென்று புகார் அளித்த மனைவி.!!

வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்  பிரித்திகா. இவருடைய கணவரான சேகர்  தனியார் நிறுவனத்தில் ஊழியராக" பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சேகர் ஒரே குடியிருப்பில் வசித்து வரும் அவரது"மனைவியின்"சகோதரியான லட்சுமி என்பவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார் 

இதை தெரிந்து கொண்ட லட்சுமி தனது சகோதரி பிரித்திகாவிடம் இது குறித்து கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மனைவி பிரித்திகா கணவர் சேகரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து ஆராய்ந்துள்ளார். அதில் தனது சகோதரியின் வீடியோ மட்டுமல்லாது, அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களின் சில வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது

பின்னர் பிரித்திகா இது குறித்து  திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரை பெற்று கொண்ட காவல் ஆய்வாளர் ஷீலா மேரி சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆபாச வீடியோ எடுத்த கணவன் மீது தைரியமாக  புகார் கொடுத்த மனைவியை காவலர்கள் சிலர் வெகுவாக பாராட்டினர்.