மனைவியின் நடத்தையில் சந்தேகம் : குத்திக் கொன்றுவிட்டு சரணடைந்த கணவன் !!

விருத்தாசலம் அருகே மனைவி மீது சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலைத்தில் சரணடைந்தார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் : குத்திக் கொன்றுவிட்டு சரணடைந்த கணவன் !!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ராஜலட்சுமி இவருக்கும் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 7 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்து ஒரு ஆண்டில் கணவர் விபத்தில் இறந்ததால் ராஜலட்சுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜலட்சுமிக்கும் ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகள் முன்பு இரண்டாவது திருமணம்  நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் முதல் கணவர் விபத்தில் இறந்ததற்கு நஷ்ட ஈட்டு  பணம் ராஜலட்சுமியிடம் 3 லட்சம் இருந்துள்ளது. அந்தப் பணத்தை வாங்கி நாகராஜன் செலவழித்து விட்டதாகவும் பின்னர் ராஜலட்சுமியிடம் தகராறு செய்ததால் ராஜலட்சுமி தனது தந்தை ஊருக்கு கம்மாபுரம் வந்துவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் நாகராஜன் தன் மனைவியிடம் சமாதானம் செய்து நாம் இரண்டுபேரும் கம்மாபுரம் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் இரண்டு பேரும் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்துவந்தனர் ராஜலட்சுமி கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். நாகராஜன் சித்தாள் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நாகராஜன் மீண்டும் ராஜலட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு ராஜலட்சுமியின் சம்பளப் பணத்தையும் வாங்கி செலவழித்து வந்தார்.

இந்த நிலையில்  நாகராஜன் தனது அக்கா பேச்சைக் கேட்டுக் கொண்டு அடிக்கடி ராஜலட்சுமியிடம்  தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நாகராஜ் தனது மனைவி ராஜலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் நாகராஜ் மாமியார் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு ஆவினங்குடிக்கு சென்று அவரது அக்காவை பார்த்து விட்டு மீண்டும் கம்மாபுரம் வீட்டிற்கு வந்துள்ளார்.

ராஜலட்சுமி  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு  வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது நாகராஜனுக்கும், ராஜலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நாகராஜன் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டில் டி.வி. சப்தத்தை அதிகரித்து வைத்து ராஜலட்சுமியின் கையைக் கட்டி விட்டு  நாகராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் முதுகிலும், கழுத்திலும் தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் ராஜலட்சுமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் நாகராஜன் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது ரத்த கரையுடன் சென்றதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு வீட்டில் சென்று பார்த்தபோது ராஜலட்சுமி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட நாகராஜ் அங்கிருந்து தப்பித்து ஓடி கம்மாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு கம்மாபுரம் போலீசார் சென்று ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பிவைத்தனர். மனைவியை சந்தேகப்பட்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.