கோவில் பூசாரி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது...!!

திருப்பத்தூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட பூசாரி வழக்கில் பத்து மாதம் கழித்து சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில் பூசாரி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது...!!

திருப்பத்தூர் அடுத்த  குரிசிலாப்பட்டு  வடுகமுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். குடிநீர் டேங்க் ஆப்ரேட்டராகவும், வீட்டின் அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் கட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளிலும்  அமாவாசை, பவுர்ணமி போன்ற  தினத்தன்று சிறப்பு பூஜையும் செய்து குறி சொல்லி வந்துள்ளார்.

சீனிவாசனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவர், சில வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த  தீபாவை திருமணம் செய்துள்ளார்.

குடிபோதைக்கு அடிமையான குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி தீபாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீபாவின் தம்பியான வெங்கடேசன், தீபா மற்றும் குமார் ஆகிய இருவரையும் பூசாரியான சீனிவாசனிடம் அழைத்து வந்துள்ளார்.

அதன்பின்னர் தீபாவை பூசாரி அடிக்கடி பரிகாரம் செய்ய அழைத்ததாகவும், அதன் விளைவால் பூசாரிக்கும், தீபாவிற்கும் இடையே கள்ளதொடர்பு மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் பூசாரி சில மாதங்களிலேயே தீபாவை அழைத்து வந்து தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளார்.

மேலும் தீபாவின் தம்பியான வெங்கடேசனுக்கும்  ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் வசிக்கும் சேகர் மனைவி மலர் என்கிற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் சில ஆண்டுகளாக இருந்து வந்ததாக தெரிகிறது. வெங்கடேசன் மற்றும் மலரின் கள்ள தொடர்பு சேகருக்கு தெரியவர இந்த பிரச்சினையை  தீர்த்து வைக்கவும் வெங்கடேசன், கள்ளக்காதலி மலர் மற்றும் அவருடைய கணவன் சேகர் ஆகிய மூவரும் சேர்ந்து பூசாரியான சீனிவாசனிடம் வந்துள்ளனர்.

நமக்குத் தெரிந்தவர் தானே என்ற  முறையில் வெங்கடேசன் மலரை அழைத்து வந்து பிரச்சினையை தீர்க்க சொல்லியுள்ளார். ஆனால் சீனிவாசனும் மலரை அவருடைய கணவரான சேகர் உடனே செல்லும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தனது அக்காவான தீபாவையும் கள்ளத்தனமாக வைத்துள்ளார் எனக்கு உதவி செய்வார் என்று மலரை கூட்டி வந்தால் அவருடைய கணவருடன் அனுப்பி வைத்து விட்டாரரே என கோபம் கொண்ட வெங்கடேசன், பூசாரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். 

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி அதிகாலை சீனிவாசன் கோயில் பூஜைக்கு செல்லும்பொழுது, வெங்கடேசனும் அவருடன் சேர்ந்து கிளீனர் வேலைக்கு உதவிகரமாக இருந்த 15 வயது சிறுவனும் சேர்ந்து ஸ்டெப்னி இரும்பு கம்பியால் சீனிவாசனின் பின்மண்டையில் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பூசாரியை படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகளை குரிசிலாப்பட்டு காவல்துறை வலைவீசி தேடி வந்தனர். இருப்பினும் வெங்கடேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. ஆனால் முறையான ஆதாரம் இல்லாததால் இதுவரை குற்றவாளியான வெங்கடேசன் பிடிக்க முடியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதேபோல் வெங்கடேசன் உடனிருந்த 15 வயது சிறுவனின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில்  குற்றவாளியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனை அழைத்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதில் வெங்கடேசனுடன் சேர்ந்து கொலை குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

இந்த விஷயம் வெங்கடேசனுக்கு தெரியவரவே, அவர் பதுங்கியதாக தெரிகிறது. அதனைதொடர்ந்து வெங்கடேசனை தீவிரமாக தேடி வந்த போலீசார், அவர் மிட்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.