பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் : வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை !!

ராமேஸ்வரத்தில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்ததாக ஆறு வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் : வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை !!

ராமேஸ்வரம் அருகேயுள்ள வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சந்திரா என்பவர் கடல்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் பாசி சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்ற சந்திரா மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.

அப்போது கடல் பாசி சேகரிக்க கொண்டு சென்ற கண்ணாடி, பாத்திரம் உள்ளிட்டவை இறால் பண்ணைக்கு அருகில் கிடந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர தேடுதலின் போது சந்திராவின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி 6 பேரையும் சரமாரியாக தாக்கி இருச்சக்கர வாகனங்களை தீவைத்து எரித்தனர். இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்த சூழலில், 6 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், பெரும் பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.