ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை  

திருச்சியில், ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை   

திருச்சியில், ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னூரை சேர்ந்த கல்லூரி மாணவியான மலர்விழி மீராவை,  திருமணமான பால முரளி கார்த்தி என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு, தனது காதலை ஏற்க மறுத்ததால் , கார்த்தி,  மலர்விழியை குத்தி கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கார்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதியாகவே, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதித்து கூடுதல் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டார்.

மேலும்,  அபராதம் செலுத்த தவறினால்  3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அபராத தொகையை இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.