பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு... பெண் தேர்வருக்கு வாழ்நாள் தடை...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாளை சமூக வலைதளத்தில் பரப்பிய பெண் தேர்வருக்கு, டி.ஆர்.பி. தேர்வில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு... பெண் தேர்வருக்கு வாழ்நாள் தடை...

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியான விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, சமீபத்தில் போட்டித் தேர்வு நடைபெற்றது. அதற்கான வினாத்தாள், தேர்வு முடிந்த சில நிமிடங்களில் சமூக வலைதளங்கில் வெளியாகின. கணினி வழியில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட150 கேள்விகளும், அதற்கான விடைகளும் வெளியானதால், முன்கூட்டியே அவை வெளியாகி இருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்லில் தேர்வு ழுதிய ஒரு பெண் தேர்வர், தேர்வு அறையில் விடை எழுதுவதற்கு பதிலாக, ஒட்டுமொத்த கேள்வி மற்றும் பதில்களை, தனி வெள்ளைத்தாளில் எழுதி, அதனை வெளியே எடுத்து வந்துள்ளார்.

இந்த சம்பவம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில் உறுதியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் தேர்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும், ஆசிரியர் வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க அந்த தேர்வருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இனி நடைபெறும் தேர்வுகளில் குறிப்புகள் எழுதி பார்ப்பதற்காக தேர்வர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ளைத்தாளையும் அதிகாரிகள் திருப்பி பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.