ஸ்கெட்ச் போட்டு மர்டர் செய்வதில் கில்லாடி... பிரம்மாண்ட ராஜ்ஜியம் நடத்தி வந்த லோக்கல் தாதா!! 

சென்னையின் முக்கிய ரவுடிகளுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்ட சிடிமணி, ரவுடிகளை கொல்ல ஸ்கெட்சி போடுதல், தீர்த்து கட்டுதல் போன்ற பயங்கரமான சம்பவங்களின் ஈடுபட்டுள்ளார்.

ஸ்கெட்ச் போட்டு மர்டர் செய்வதில் கில்லாடி... பிரம்மாண்ட ராஜ்ஜியம் நடத்தி வந்த லோக்கல் தாதா!! 

தேனாம்பேட்டை மணிகண்டன் என்கிற சிடி மணி ஆரம்ப கட்டதில் தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் சிடி விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதற்காக லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அவரை அடிக்கடி விசாரனைக்கு அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதன்காரணமாக சாதாரண மணியின் பெயர் சி.டிமணியாக பிரபலமானது.

இந்நிலையில், ஒரு நாள் திடீரென தன்னுடைய ஆத்மார்த்த குருவான  திண்டுக்கல் பாண்டி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒரு  புதிய டீமை உருவாக்கி  தனக்கென பிரம்மாண்ட ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார் சிடி மணி

இதற்கிடையில் ஆள் கடத்தல், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை என அடுத்தடுத்து சி.டி மணி மீது வழக்குகள் பாய்ந்தன. அவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 35 வழக்குகள் உள்ளன. சி.டி மணியின் தரப்பினரால் எதிரிகள் கொல்லப்பட்டனர். 

பழிக்குப்பழியாக சி.டி மணி கூட்டாளிகளும் கொல்லப்பட்டனர். அதன்பிறகு சென்னையின் முக்கிய ரவுடிகளுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்ட சிடிமணி, ரவுடிகளை கொல்ல ஸ்கெட்சி போடுதல், தீர்த்து கட்டுதல் போன்ற பயங்கரமான சம்பவங்களின் ஈடுபட்டுள்ளார்.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும் சி.டி  மணியும் நண்பர்களாக இருந்தனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடியின் எதிரியான, சென்னை மலையம்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினுவை கொலை செய்ய ஸ்கெட்ச் போடப்பட்டது. ஆனால், அந்த சதித் திட்டத்தை காவல் துறையினர் முறியடித்தனர். 

சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரு ரவுடியும் வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடிக் கும்பலும் சி.டி மணியை கொல்ல நீண்ட காலமாக சதித்திட்டம் திட்டிவந்தனர். இதனால், எப்போதும் துப்பாக்கியோடு மணி வலம் வந்தார். அவரின் பாதுகாப்புக்காக எந்நேரமும் ஒரு கூட்டம் இருக்கும். ரவுடி பினுவின் கைதுக்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர் காவல் துறையினர். ஆனால், அவர்களிடமிருந்து ரவுடி சி.டி மணி ஒவ்வொரு முறையும் தப்பிவந்தார். ஆனால்,  ஆந்திரா, கர்நாடகா என பல இடங்களில் பதுங்கியிருந்த சி.டி மணியின் நடமாட்டம் சென்னையிலும் அவ்வப்போது இருந்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சி.டி மணியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. 

சி.டி மணி மீது கடந்த 2007ல் தேனாம்பேட்டையில் வெங்கடா கொலை வழக்கு, கோயம்பேட்டில் வாழைத் தோப்பு சதீஷ் கொலை வழக்கு, கே.கே.நகரில் சங்கர், திவாகரன் என இரட்டைக் கொலை வழக்கு ஆகியவை முக்கியமானவை. நடுமண்டையில் வெட்டிக் கொலை செய்வதே சி.டி மணியின் ஸ்டைல். சி.டி மணி, காதலித்து திருமணம் செய்தவர். அமைதியாகவே பேசுவார். ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடி