அரியர் வைத்த மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..  

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு MBBS பயின்று வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாணவன் ரஞ்சித் குமார் (வயது 24) இன்று அதிகாலை அரசு மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் இறந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த ரஞ்சித்துக்கு அரியர் இருந்ததாகவும், சகமாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராகப் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், தான் இன்னும் மருத்துவ படிப்பை முடிக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் இந்த துயர முடிவை எடுத்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.