குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்ட பாஜக முன்னாள் கவுன்சிலர்...ஏன் தெரியுமா?

குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்ட பாஜக முன்னாள் கவுன்சிலர்...ஏன் தெரியுமா?

மத்தியப்பிரதேசத்தில் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற முடியாததால் அவர்களோடு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

மத்தியபிரதேசம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாஜக கவுன்சிலர் சஞ்சீவ் மிஸ்ரா, தனது மனைவி மற்றும் 2 குழுந்தைகளுடன் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், போலீசாருக்கு சஞ்சீவ் மிஸ்ரா எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது. 

இதையும் படிக்க : நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு லதா தான் காரணம்...நெகிழ்ச்சி தெரிவித்த ரஜினிகாந்த்!

அந்த கடிதத்தில், ”தனது 2 மகன்களும் “தசை சிதைவு” என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காததால் எங்களால் தாங்க முடியவில்லை. அதனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், மரபணு நோயால் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தைகளை காப்பாற்ற முடியாததால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.