பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே ஆசிரியர் பாலியல் தொந்தரவு ... போட்டிகளுக்காக மாணவியை அழைத்து சென்று சில்மிஷம்!!

அண்ணா நகர் பத்ம சேஷாத்ரி மில்லியனம் பள்ளி கராத்தே பயிற்சியாளர் கெவின் மீது ஐ.பி.சி 376 பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல், 506 (1) கொலை மிரட்டல், 354 பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு.

பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே ஆசிரியர்  பாலியல் தொந்தரவு ... போட்டிகளுக்காக மாணவியை அழைத்து சென்று சில்மிஷம்!!

அண்ணா நகர் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் மீது முன்னாள் மாணவி  பாலியல் தொந்தரவு புகார் அளித்ததன் பேரில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் பகுதிநேர கராத்தே பயிற்சியாளராகவும் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இவர் வேறு சில பள்ளிகளிலும் பகுதிநேர ஆசிரியராக கராத்தே பயிற்சி கொடுத்து வந்துள்ளார். 

இவரிடம் கராத்தே பயிற்சி பெற வந்த முன்னாள் மாணவி ஒருவரிடம் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் போதும், பிற பள்ளிகளில் நடைபெறும் தற்காப்பு போட்டிகளுக்காக அந்த மாணவியை அழைத்து செல்லும் போதும் பாலியல் தொந்தரவு ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் நடைபெறும் தற்காப்புக்கலை போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் போதும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும்  கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கெபிராஜ் மீது பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில்  பெண் வன்கொடுமை சட்டம், பாலியியல் துன்புருத்தல், மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்குப்பதிவு செய்து அவரிடம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.