பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை- பழிக்கு பழியாக நடந்த சம்பவமா ? போலீசார் விசாரணை...

தூத்துக்குடி மாவட்டம் எரல் அருகே பழிக்கு பழியாக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை- பழிக்கு பழியாக நடந்த சம்பவமா ? போலீசார் விசாரணை...

தூத்துக்குடி மாவட்டம் எரல் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்சீலன். இவர் அகரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையில் அகரம் கிராமத்தில் நேற்று கோவில் கொடைவிழா என்பதால் துணைத்தலைவர் தவசிகனி வீட்டிற்கு கறி விருந்து சாப்பிட பஞ்சாயத்து தலைவரான பொன்சீலன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அரிவாளால், பொன்சீலனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த ஏரல் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பொன்சீலன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டனர். அதில் ,கடந்த 2017-ம் ஆண்டு அகரம் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பரை பொன்சீலன் உள்பட 14 பேர் வெட்டிக்கொலை செய்தனர். அந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பொன்சீலன் என்பதால், அதற்கு பழியாக கூட இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதனைதொடர்ந்து  லெனின் தம்பிகளான ரூபன், ஜெகன் மற்றும் அவர்களின் நண்பர்கள் ஜெபசிங், ஜெபஸ்டின் ஆகிய 4 பேரை திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி போலிசார் சோதனைச்சாவடியில் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.