பள்ளிக்கு போகச்சொல்லி பெற்றோர் வற்புறுத்தல்: மாணவன் தற்கொலை

சென்னை அடுத்த செங்குன்றத்தில் பள்ளிக்கு போகச்சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பள்ளிகள் இயங்காத ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து விளையாடிக்கொண்டிருந்த மாணவன் திடீரென்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளிக்கு போகாமல் அடம் பிடித்து வந்திருக்கிறார். இதனால் பெற்றோர் அவரை பிடிவாதமாக பள்ளிக்கு போகச்சொல்லி கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சிவசக்தி(வயது14), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அவர் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் தான் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மாணவனின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.