மகளின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற பெற்றோர்... வெட்டுக் காயங்களுடன் மகள் மருத்துவமனையில் அனுமதி...

மகளின் கள்ளக்காதலனை பெற்றோர் உள்பட குடும்பத்தினர்  6 பேர் ஒரே கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற பெற்றோர்... வெட்டுக் காயங்களுடன் மகள் மருத்துவமனையில் அனுமதி...
திருவள்ளூர் அருகே  காக்களூர்  ஆஞ்சநேயபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அலறல் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர். இதில் அந்த வீட்டில் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்த  காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் விழுந்து கிடப்பதும் அரை மயக்கத்தில் பெண்ணொருவர் காயங்களுடன் உள்ளது தெரிய வந்தது.
 
இதனையடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆண் நபர் ரத்தவெள்ளத்தில் இறந்துள்ளது தெரியவந்தது. தலையில் வெட்டுக் காயங்களுடன் மயக்கத்தில் இருந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்து காவல்துறையினரின்  முதற்கட்ட விசாரணையில்  மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சத்யா (30) இவருக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு  3 மகள்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சத்யாவிற்கும் அவரது கணவர் வெங்கடேசன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் வெள்ளேரிதாங்கள்  பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து சத்யாவின் பெற்றோர் சத்யாவை கண்டித்துள்ளனர். மேலும் மூன்று மகள்கள் உள்ள நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு அறிவுறுத்திய நிலையில் சத்யா கேட்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடியேறியுள்ளார். சத்யாவை பார்ப்பதற்காக வழக்கறிஞர் வெங்கடேசன் வீட்டுக்கு வந்துள்ளார்.
 
இந்த நிலையில் சத்யாவின் தந்தை சங்கர், தாய் சின்னம்மா, தங்கை சங்கீதா, தம்பி வினோத், தங்கையின் கணவர்,  சித்தி தேவி ஆகியோர் சத்யாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டுக்குள் இருந்த இருவரை கண்டதும் ஆத்திரமடைந்து அவர்கள் கொண்டு வந்த கத்தியால் ஒருவருக்கொருவர் மாறி மாறி வெங்கடேசனை கத்தியால்  வெட்டி கொலை செய்துள்ளனர்.  இதில் தடுக்க வந்த சத்யாவிற்கு தலை மற்றும் உடலில் வெட்டு காயங்களில் மயங்கி விழுந்துள்ளார்.  ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவரையும்  வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பியோடிய பெற்றோர் மற்றும் உறவினர்களை திருவள்ளூர் தாலுகா  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.
கள்ளக்காதலனை பெற்றோர் மற்றும் உறவினர்கள்  உள்பட ஆறு பேர் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.