யார் அந்த வாடிக்கையாளர்..? கடைகளில் திருடும் நபருக்கு போலீஸ் வலைவீச்சு...
சென்னையில் வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இளம்பெண்ணை ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரசல் கிராமத்தில் வசித்து வந்தவர் மாரியப்பன் என்பவரின் மகள் சந்தியா. 18 வயதான சந்தியா, பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்கொண்டு கல்லூரி செல்ல வழியில்லாத காரணத்தால் நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் பேன்ஸி ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சந்தியாவை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்ட சந்தியா, இளைஞரின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த காதலன், தொடர்ந்து தொல்லைகள் செய்யவே, இதுகுறித்து உறவினர்களிடத்தில் தெரிவித்தார் சந்தியா. பின்னர் சந்தியாவின் உறவினர்கள் கண்டித்ததால் கோபமடைந்த இளைஞர், காதலியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதன்படி 2-ம் தேதியன்று சந்தியா பேன்சி கடையில் அமர்ந்ததை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்துள்ளான் காதலன். வாடிக்கையாளர்கள் கேட்ட பொருட்களை அருகில் உள்ள குடோனுக்கு சென்று எடுத்து வர இதனை பார்த்த காதலன், பைக்கில் இருந்து அரிவாளை எடுத்து விரட்டினார்.
நெல்லையப்பர் - காந்தி அம்பான் கோயில் வழியாக சந்தியா செல்வதை பார்த்தவர் அவரை பின் தொடர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி வீசினார். ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததையும் மீறி சென்ற கொடூரன், காதல் நிறைவேறாத காரணத்தால் காதலியை சரமாரியாக வெட்டி வீசி விட்டு வந்த பைக்கிலேயே திரும்பி சென்றுள்ளான்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் திருநெல்வேலி மாநகரையே கிடுகிடுக்க வைத்த நிலையில், டவுண் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இளம்பெண் மரணத்துக்கு காரணமானவரை உடனடியாக கைது செய்யுமாறு, சந்தியாவின் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டதால் திடீரென அங்கு பரபரப்பு நிலவியது.
கொடுங்கையூரில் பணம் வைத்து சூதாடியவர்களை மிரட்டி நகை பணம் பறித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மூலக்கடை வெங்கடேஸ்வர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் 37. இவர் மற்றும் இவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொடுங்கையூர் மேற்கு இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வழக்கமாக பணம் வைத்து சீட்டு ஆடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு சீட்டு ஆடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஐந்திற்கும் மேற்பட்ட கும்பல், சீட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக தாக்கி ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 1/2 சவரன் தங்க நகை 3 செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ். ரவி உள்ளிட்டோர் கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஏற்கனவே அஜய் புத்தா, நரேஷ் குமார் என்கின்ற குரு, பிரேம்குமார், பரத், நவீன், யுவராஜ், பிரசாந்த் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த சோபனா என்ற சௌபாக்கியவதி 39 மற்றும் பாரிமுனை பகுதியைச் சேர்ந்த ரகுமான் 38 ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். அவர்கள் இருவரையும் நேற்று கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட சௌபாக்கியவதி வழக்கமாக ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பணம் வைத்து சூதாடும் இடத்தில் இவரும் பணம் வைத்து சூதாடுவது வழக்கம். ஆனால், சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் சௌபாக்கிய வதியை சீட்டு ஆட வர வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சௌபாக்கியவதி ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரகுமானிடம், "குறிப்பிட்ட இடத்தில் நிறைய பணம் வைத்து சீட்டு ஆடுகிறார்கள். அங்கு சென்று அவர்களை அடித்து பணம் பறித்தால் இது குறித்து அவர்கள் போலீசிடம் போக மாட்டார்கள்" எனக் கூறி இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து ரகுமான் மற்றும் சௌபாக்கியவதி மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!
சேலம் அருகே ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். பத்து ரூபாய் இயக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் அதே பகுதியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்.
இதனால் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கும், அருண்குமார் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புதாரர்கள் அருண்குமார் வீடு புகுந்து அவரது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி, உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் சில போலீசார் சேர்ந்து அழித்ததாக கூறி அருண்குமார் சேலம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வழக்கில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணை புரிந்த காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவர் மீதும் அதே காவல் நிலையத்தில் ஏழு நாட்களுக்குள் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ராஜா அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.
சேலம் மாவட்ட காவல் துறையில் காவல் ஆய்வாளர் மீது அதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது இதுவே முதல் முறை என்பதால் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பணிக்கு தேர்வு நடத்தியது தொடர்பாக நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளித்ததாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இரு சார்பு செயலாளர்கள் என நான்கு பேர் மீது நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர் வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர் வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கியதற்காக, தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய பு வி, துணைச் செயலாளர் ஏ. வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரி வித்தார்.
மேலும், தேர் வில் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனவும், தவறு எப்படி நடந்தது, எப்படி சரி செய்வது என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும் மொத்த தேர்வு முறை குறித்து விசாரித்தால் அது தேர்வாணையத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் விளக்கமளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க:முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!
மனசாட்சி இல்லாத தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது
புதுச்சேரியை சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றும் கட்டாய பணி உத்தரவாதம் புரிவதாக உறுதியளிக்கவில்லை போன்ற காரணங்களை கூறி, சித்தார்த்தனுக்கு மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிவித்தார்.
அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து அவர் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டதாக புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர், மருத்துவ மேற்படிப்பை முடித்திருந்தாலும், 2017-18ம் கல்வி ஆண்டில் அவருக்கு அனுமதி மறுத்தது தவறு எனக் கூறி, இதற்காக 15 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதில் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் 10 லட்சம் ரூபாயும், செண்டாக் தேர்வுக் குழு ஐந்து லட்ச ரூபாயையும் நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சமூகத்திற்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு, மனசாட்சியே இல்லாமல், தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, இந்த இரு கண்களும் தற்போது வணிக பொருட்களாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தனியார் கல்லூரிகளில் இது போன்று நடக்காமல் இருக்க தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்குமெனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!