தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் போலீஸ்... புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்...

ராயபுரம் காவல்நிலையத்தில் 5 லட்சத்து 45 ஆயிரம் பணம் மோசடி செய்ததாக பெண் காவலர் மீது பொதுமக்கள் புகார் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் போலீஸ்... புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்...

புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த ரவிக்குமார் என்பவர் தான் குடியிருந்த பகுதியின் அருகே வசித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆனந்தி என்பவரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்து புகாரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மாதத் தவணையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆயிரம் கட்டி தீபாவளியை முன்னிட்டு 15,000 திருப்பி தருவதாக கூறியதன் பெயரில் ரவிக்குமார் தனது மனைவி மகள் பெயரில் தனது மகளின் திருமணத்திற்காக உபயோகப்படும் என்று எண்ணி 30 சீட்டு போட்டதாகவும், மேலும் தனக்கு அருகில் உள்ளவர்களுக்கும் ஆனந்தியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் மொத்தம் 43 சீட்டுகள் வீகிதம் 6 லட்சத்து 75 ஆயிரம் திருப்பி கொடுக்கப்பட வேண்டிய நிலையில் இரண்டு மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழித்து வருவதாகவும் இது தொடர்பாக ராயபுரம் N1 காவல் நிலையத்தில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி புகார் அளித்து சிஎஸ்ஆர் போடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் ஆனந்தி ஒரு காவலர் என்பதால் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த தங்களை ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி அலைக்கழித்து வருவதாகவும், ஆனந்தி மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் பணத்தை சிறிது சிறிதாக கொடுப்பதாக கூறி பலமுறை ராயபுரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தவர்களை வரவழைத்து அலைக்கழித்து பின்னர் சிறிது சிறிதாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு 5 லட்சத்து 45 பணத்தை இதுவரையில் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும் கூறினார்.

ஆன்லைன் மூலமாக பணம் கட்டியதற்கான ஆதாரங்கள் மற்றும் பணம் திருப்பித் தருவதற்காக கொடுக்கப்பட்ட ரிட்டன் ஆன காசோலைகள் ஆடியோ ஆதாரங்கள் என அனைத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் காவலர் என்பதற்காக ஆனந்தி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெரும் மன வேதனை அளிப்பதாகவும்  ரவிக்குமார் புவனேஷ்வரி,  ஷாலினி ஆகியோர் தெரிவித்தனர்.