காதலித்த மாணவியிடம் பொய் உரைத்து திருமணம் செய்த காதலன்..! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் கைது!!

காதலித்த மாணவியை பொய்க்கூறி திருமணம் செய்து பாலியல் உறவில் இருப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் போக்சோவில் கைது. 

காதலித்த மாணவியிடம் பொய் உரைத்து திருமணம் செய்த காதலன்..!  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் கைது!!

வேலூர் மாவட்டம், விருஞ்சிபுரம் கிராமம் தென்னை மரத்தெருவை சோ்ந்தவர் கோகுல். இவருக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துக்கொள்ளும் அளவிற்கு காதல் அரும்பி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி கோகுல் அந்த மாணவியிடம் தனக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்துவிட்டார்கள், அதனால் நீ திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியும் உடனடியாக புறப்பட்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியை திருமணம் செய்து கொண்ட கோகுல், பாலியல் வன்புணா்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து மாணவியை மிரட்டியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். உடனடியாக கோகுலை தொடர்பு கொண்டு பேசிய மாணவியின் தாய் அவரை கண்டித்துள்ளார். அப்போது கோகுல், உங்கள் மகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பகிராமல் இருக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி இது சம்பவம் குறித்த தகவலை திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோகுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.