போலி நகையை கொடுத்து மோசடி.., வடநாட்டு கும்பலை கைது செய்தது போலீஸ்...

போலி நகைகளை அடகு மற்றும், நகை கடைகளில் கொடுத்து ஏமாற்றும் வடமாநில கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.

போலி நகையை கொடுத்து மோசடி.., வடநாட்டு கும்பலை கைது செய்தது போலீஸ்...
கடந்த 29ஆம் தேதி நாக்பூரில் இருந்து ஜிடி எக்ஸ்பிரஸ்  மூலம் சென்னை வந்துள்ள வடமாநில கும்பல் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தாஜ் கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் இரண்டு ரூம்கள் வாடகைக்கு எடுத்து சாதாரண குடும்பம் போல் சிகிச்சைக்கு வந்ததாக தங்கியுள்ளனர்.
 
இரவு ரோந்து பணியில் இருந்த பூக்கடை ஆய்வாளர் வஜ்ரவேலு தாஜ் கெஸ்ட் ஹௌஸ் தணிக்கை செய்தபோது அங்கு தங்கியிருந்த இவர்கள் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்து  அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.
 
அப்போது அரை கிலோ அளவுள்ள 500 கிராம் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் அடகு வைத்த ரசீதுகள் மற்றும் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கி இருந்ததால் 5 பேரையும் குழந்தைகளையும் அழைத்து காவல் நிலையம் சென்றனர்.
 
விசாரணையில் இவர்கள் 5 பேரும் திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றி நகை வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு வருவது போன்று நடித்து இரண்டு குடும்பமாக பிரிந்து இங்கு வந்து நகைகளில் ஏமாற்றி வாங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
கமலேஷ்(40),அனிதா (38), நிர்மல் குமார் (41), மாலதி(40), சோனி (30) இவர்கள் 5 பேரும் உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டம் ஆஸன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நகை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்திற்கு பூக்கடை போலீசார் தகவல் அளித்து  காவல் நிலையத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட டவுன் காவல்  ஆய்வாளர் ரவிக்குமார் ஐந்து பேரையும் கைது செய்து அவரிடமிருந்த நகை பொருளும் பறிமுதல் செய்து திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.