4 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு : தந்தையைத் தேடும் காவல்துறை !!

4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறை தேடி வருகின்றது.

4 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு : தந்தையைத் தேடும் காவல்துறை !!

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில்  ராஜேந்திரன் அவரது 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 1088 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் செய்துள்ளார்கள்.

சென்னைக்கு வந்த அழைப்பை தந்தைகள் பாதுகாப்பு நல சமூக பணி அமைப்பினர் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அந்த அமைப்பின் கிளை அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் அதன்படி திருவாரூர் குழந்தைகள் பாதுகாப்பு நல சமூக பணி உறுப்பினர் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் ராஜேந்திரன் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
 
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல சமூக அமைப்புஅளித்த புகாரில்  திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜேந்திரன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை போலீஸார் தேடிவருகின்றனர்.

மேலும் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜேந்திரன், அப்பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், ஆபாசமாக உடை அணிவதும், ஆபாச வார்த்தைகளை கொண்டு பெண்களை திட்டுவதும் என பல தொந்தரவுகளை ராஜேந்திரன் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஊர் முக்கியஸ்தர்களால் எச்சரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.  தான் பெற்ற மகளுக்கு இவ்வாறு கொடுமை செய்த கொடூரனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.