அதிமுக பிரமுகர் வீட்டில் விடிய விடிய சோதனை…

முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருந்த போது  அரசு ஒப்பந்த பணிகளை எடுத்த அதிமுக  பிரமுகர் வெற்றிவேல்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

அதிமுக பிரமுகர் வீட்டில் விடிய விடிய சோதனை…

முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருந்த போது  அரசு ஒப்பந்த பணிகளை எடுத்த அதிமுக  பிரமுகர் வெற்றிவேல்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி, கைப்பற்றப்பட்ட  ஆவணங்கள் அடிப்படையில்  ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்  வேலுமணிக்கு  நெருக்கமான ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான  வெற்றிவேலுக்கு  சொந்தமான சென்னை எம்ஜிஆர் நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணைச் செயலாளராக  இருந்து வருகிறார். மாநகராட்சி டெண்டரில் எத்தனை ஒப்பந்தங்கள் வெற்றிவேல் எடுத்துள்ளார்? அதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.