ஏடிஎம்களில் கொள்ளையடித்து பிட்காயினில் முதலீடு...

சென்னையில் ஏடிஎம் இயந்திரங்களில் பல கோடி ரூபாய் கொள்ளையடித்து பிட்காயினில் முதலீடு செய்து சம்பாதித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஏடிஎம்களில் கொள்ளையடித்து பிட்காயினில் முதலீடு...

சென்னை முட்டுக்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ஏராளமான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்கிம்மர் இயந்திரங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காரில் வந்த லாவா சந்தன், பிரவீன் கிஷோர், சிக்கேந்தர் பாதுசா ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லாவா சந்தன் பல வருடங்களுக்கு  முன் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தி பல கோடி கொள்ளையடித்து, தலைமறைவாகியது தெரியவந்தது.

மேலும், சிக்கேந்தர் பாதுசா பெட்ரோல் பங்குகளிலும், ஏடிஎம் மையங்களிலும் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளையடித்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், இவர்கள் கொள்ளையடித்த பணத்தை பிட்காயின் மூலம் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.