பிரபல ரவுடி அருள்ராஜ் துப்பாக்கி முனையில் கைது...

பிரபல ரவுடி அருள்ராஜ் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான்.

பிரபல ரவுடி அருள்ராஜ் துப்பாக்கி முனையில் கைது...
சென்னை அம்பத்தூரில் பதுங்கி இருந்த நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். நெல்லை அருகேயுள்ள வேதக்கோயில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி அருள்ராஜ். இவர் மீது பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு  காவல்நிலையங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
இவர் சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், துப்பாக்கி முனையில் அருள்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.