ரம்மி விளையாட்டில் ரூ.7 லட்சம் இழப்பு: துப்பாக்கியால் சுட்டு போலீஸ் தற்கொலை!

ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் பணம் இழந்ததாலேயே மனமுடைந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரம்மி விளையாட்டில் ரூ.7 லட்சம் இழப்பு: துப்பாக்கியால் சுட்டு போலீஸ் தற்கொலை!

ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் பணம் இழந்ததாலேயே மனமுடைந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஜரூர் தாலுக்காவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் சென்னையில் ஆயுதப்படைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆம் தேதி வழக்கம்போல் பாதுகாப்புப் பணியிலிருந்த வேலுச்சாமி திடீரென தன் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தொண்டை குழி பகுதியில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது உடனடியாக சத்தம் கேட்டு அருகிலிருந்த போலீசார் வேலுச்சாமியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். துப்பாக்கி குண்டு மூளையை துளைக்காமல் இருந்ததால் நூலிழையில் உயிர் தப்பிய வேலுச்சாமிக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேலுச்சாமி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்பது குறித்து பல கோணங்களில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேலுச்சாமி இணைய வழியில் விளையாடும் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி 7 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இணைய ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டவரான வேலுச்சாமி செல்போனில் தொடர்ந்து பணம் கட்டி ரம்மி விளையாடி வந்ததாகவும், அவர் 7 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று இந்த விளையாட்டில் கட்டி பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேலுச்சாமி பாதுகாப்பு பணியிலிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.